என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வக்கீல் முறையீடு
நீங்கள் தேடியது "வக்கீல் முறையீடு"
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வக்கீல் முறையீடு செய்துள்ளார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார்கள்.
அப்போது வக்கீல் சூரிய பிரகாசம் ஆஜராகி, தூத்துக்குடியில் கடந்த மே 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டும் என்று நான் தொடர்ந்தேன்.
ஐகோர்ட்டு, அதுகுறித்து பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு இந்த பிரச்சினையை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அவசர அவரசரமாக ஐகோர்ட்டு ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு நிலுவையில் இருக்கும்போது, தமிழக அரசின் இந்த உத்தரவு சரியானது அல்ல. தற்போது அருணா ஜெகதீசன் விசாரணையையும் தொடங்கி விட்டார். இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக நான் தொடரும் வழக்கை இன்று விசாரிக்க வேண்டும்’ என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வருகிறது. அப்போது, இது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்கள்.
அதற்கு வக்கீல் சூரிய பிரகாசம், அதுவரை நீதிபதி அருணா ஜெகதீசன் சாட்சிகளை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதிகள் இது குறித்து பின்னர் பரிசீலிக்கலாம் என்று கூறினார்கள்.

×

X